காட்டுநாயக்கன் பழங்குடியினர் ஆர்ப்பாட்டம்


காட்டுநாயக்கன் பழங்குடியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-10T00:15:28+05:30)

காட்டுநாயக்கன் பழங்குடியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினா்.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் காட்டுநாயக்கன் பழங்குடியினர், பன்றி வளர்ப்பு தொழில் புரிவோர் நலச்சங்கத்தின் சார்பில் நேற்று காலை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் அய்யனார் தலைமை தாங்கினார். செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணன், சக்கரவர்த்தி, உண்ணாமலை, ஆறுமுகம், ராஜா, மீனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்பாளர் தனசேகரன், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலியமூர்த்தி, எஸ்.சி., எஸ்.டி. பெடரேஷன் தலைவர் ராஜன் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

விழுப்புரம் நகராட்சி பகுதியில் பன்றி வளர்த்து தொழில் புரிந்துவரும் பட்டியல் பழங்குடியினர்களுக்கு பட்டி அமைத்து தொழில்புரிய இடவசதியும், உபகரணம், கச்சா பொருள் வாங்க அரசு மானிய நிதி உதவியும் வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சங்க நிர்வாகிகள் தீனதயாளன், கிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன், சிவக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் குப்பன் நன்றி கூறினார்.


Next Story