சோலார் மின்வாரிய காலனியில் குடியிருப்பு பகுதியில் தேங்கும் தண்ணீரால் நோய்கள் பரவும் அபாயம்


சோலார் மின்வாரிய காலனியில் குடியிருப்பு பகுதியில் தேங்கும் தண்ணீரால் நோய்கள் பரவும் அபாயம்
x

சோலார் மின்வாரிய காலனியில் குடியிருப்பு பகுதியில் தேங்கும் தண்ணீரால் நோய் பரவும் அபாயம் உள்ளது.

ஈரோடு

சோலார் மின்வாரிய காலனியில் குடியிருப்பு பகுதியில் தேங்கும் தண்ணீரால் நோய் பரவும் அபாயம் உள்ளது.

தேங்கும் மழைநீர்

ஈரோடு அருகே சோலாரில் மின்வாரிய காலனி குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு சாலை மற்றும் காலி இடங்களில் கடந்த சில நாட்களாக மழை நீர் தேங்கிக்கிடக்கிறது. இதனால் நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக அந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.

இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்த சிலர் கூறியதாவது:-

சோலார் பகுதியில் மிக முக்கியமான குடியிருப்பு பகுதியை ஒட்டி மின்சார வாரிய காலனி குடியிருப்பு உள்ளது. இந்த பகுதியை சுற்றி 250-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள காலி இடத்தில் தண்ணீர் தேங்கி, சாக்கடையாக மாறி உள்ளது.

துர்நாற்றம்

கடந்த 15 நாட்களுக்கு முன்னதாக மழையின்போது இங்கு தண்ணீர் தேங்கியது. அது வடிந்து செல்ல போதிய வசதி இல்லாததால் தண்ணீர் வற்றாமல் உள்ளது. இதனால் கழிவுகள் சேர்ந்து மழை நீர் சாக்கடையாக மாறியதுடன், கொசுக்கள் உற்பத்தியாகின்றன. புழுக்கள் கிடப்பதுடன், துர்நாற்றமும் வீசுகிறது. இதனால் அந்த பகுதியில் நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. சமீபகாலமாக காய்ச்சல் பரவல் அதிகரித்து இருக்கும் நிலையில், இதுபோன்ற சுகாதாரமற்ற தண்ணீரால் மேலும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க உரிய துறை அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story