லளிகம் கிராமத்தில்காவடி பாலமுருகன் கோவில் திருவிழா


லளிகம் கிராமத்தில்காவடி பாலமுருகன் கோவில் திருவிழா
x
தர்மபுரி

நல்லம்பள்ளி

நல்லம்பள்ளி அருகே லளிகம் கிராமத்தில் காவடி பாலமுருகன் கோவில் திருவிழா கணபதி ஹோமம், 108 சங்கு அபிஷேகத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று சித்தி விநாயகர் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் மூலவர், விநாயகர், காவடி பாலமுருகன் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மூலவர் வெள்ளி கவச அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காவடிக்கு கங்கை பூஜையும், சாமி வீதி உலாவும் நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர், ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.


Next Story