கராத்தே பெல்ட் டெஸ்டில் காவேரிப்பாக்கம் பயிற்சி பள்ளி சாதனை
சென்னையில் நடந்த கராத்தே பெல்ட் டெஸ்டில் காவேரிப்பாக்கம் பயிற்சி பள்ளி சாதனை படைத்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கத்தில் புடோக்காய் கராத்தே பயிற்சி பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சிலம்பம், குத்துச்சண்டை, குங்பூ, ஜூடோ, சதுரங்கம், சிலம்பம் உள்ளிட்ட விளையாட்டுகள் கற்றுத்தரப்படுகிறது. இப்பள்ளியில் பயின்ற 41 மாணவ-மாணவிகள் காவேரிப்பாக்கத்தில் நடந்த 11 கிலோ மீட்டர் மாரத்தான் போட்டியில் பங்கேற்றனர்.
சென்னையில் நடந்த கராத்தே பெல்ட் டெஸ்டில் 27 பேர் பங்கேற்றனர். இதில் எம்.ஜி.ஆர். என்கிற சீனிவாசன் (வயது 58) மற்றும் சிறுவர், சிறுமிகள் திவஸ்ரீ, நவீன், புஷ்மிதா ஆகியோர் கருப்பு பெல்ட்டும், மற்ற 23 பேர் கலர் பெல்ட்டும், சான்றிதழ்களையும் தலைமை பயிற்சியாளர் கெபிராஜ் வழங்கினார்.
பெல்ட் மற்றும் சான்றிதழ் பெற்ற 27 பேர், பயிற்சியாளர் கோ.உமாபதி ஆகியோர் சென்னையில் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அதேபோல் ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி, பெல்ட் மற்றும் சான்றிதழ்களை பெற்றவர்களை வரவழைத்து பாராட்டினார்.
இதுகுறித்து பயிற்சியாளர் கூறுகையில், 'அடுத்த ஆண்டு ஜப்பானில் நடைபெறும் சர்வதேச போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுவதற்காக, திறமையானவர்களுக்கு தினமும் 3 மணி நேரம் பயிற்சி அளித்து வருகிறோம்' என்றார்.