ஊட்டியில் கவியரங்கம்
ஊட்டியில் கவியரங்கம் நடந்தது.
நீலகிரி
ஊட்டி
ஊட்டி பாவேந்தர் இலக்கிய பேரவை சார்பில், இளவேனில் கவியரங்கம் நகராட்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பூங்காவில் நடைபெற்றது. இதற்கு கவிஞர் ஜனார்தனன் தலைமை தாங்கினார். நிலவில் ஓர் நாள் நீயே என் நிம்மதி, நீல இரவும் நீல ஒளியும், கனலிடைப் பூக்கள், கருங்குருவியின் கீதம் என்ற தலைப்புகளில் ரமேஷ்ராஜா, சந்திரன், புலவர் சோலூர் கணேசன், கார்த்திகேயன் வாசமல்லி புலவர் நாகராஜ், சிவதாஸ் ஆகியோர் கவிதைகள் எழுதினர். முன்னதாக நிலவிற்கு சந்திரயான்-3 வெற்றிகரமாக செல்ல தேவையான ஏற்பாடுகள் செய்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் விண்வெளியில் இதுபோல் பல்வேறு சாதனைகள் நடக்க வேண்டி பிரார்த்தனை செய்யப்பட்டது.
Related Tags :
Next Story