100 நாட்களில் 2.25 லட்சம் பார்வையாளர்களை ஈர்த்த கீழடி அருங்காட்சியகம்!


100 நாட்களில் 2.25 லட்சம் பார்வையாளர்களை ஈர்த்த கீழடி அருங்காட்சியகம்!
x

கீழடி அருங்காட்சியகத்தை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த மார்ச் 5-ம் தேதி தொடங்கி வைத்தார்.

கீழடி,

கீழடியில் 2600 ஆண்டுகளுக்கு முந்தைய மக்கள் பயன்படுத்திய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 18 கோடியே 42 லட்ச ரூபாய் செலவில் 10 கட்டிடங்களுடன் கட்டப்பட்ட அருங்காட்சியகத்தை முதல்வர் ஸ்டாலின் மார்ச் 5-ம் தேதி தொடங்கி வைத்தார். முதல் ஒரு மாதம் பார்வையாளர்கள் இலவசமாக அனுமதிக்கப்பட்டனர். ஏப்ரல் 1-ம் தேதி முதல் பெரியவர்களுக்கு 15 ரூபாயும், சிறியவர்களுக்கு பத்து ரூபாயும், மாணவர்களுக்கு ஐந்து ரூபாயும் நுழைவு கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

ஆறு கட்டிட தொகுதிகளில் பண்டைய கால மக்கள் பயன்படுத்திய மண்பாண்ட பொருட்கள், விளையாட்டு காய்கள், அணிகலன்கள், குறியூடுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. உலகம் முழுவதிலும் இருந்தும் பார்வையாளர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில், அருங்காட்சியகம் திறந்த 100 நாட்களில் 2.25 லட்சம் பார்வையாளர்கள் பார்வையிட்டு உள்ளனர்.

1 More update

Next Story