மலைவாழ் பெண்களிடம் சேலையை இழுத்து அத்துமீற முயன்ற கேரள வனத்துறையினர் - தென்காசியில் பரபரப்பு


மலைவாழ் பெண்களிடம் சேலையை இழுத்து அத்துமீற முயன்ற கேரள வனத்துறையினர் - தென்காசியில் பரபரப்பு
x

தென்காசியில் மலைவாழ் பெண்களிடம் கேரள வனத்துறையினர் சேலையை இழுத்து அத்துமீற முயன்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.


தென்காசி,

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் மலைப்பகுதியில் அமைந்துள்ள தலையணை பகுதி. இங்கு 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 100-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், காட்டுப்பகுதிக்கு நேற்று கிழங்கு, தேன் எடுக்க சென்ற சரசு, சின்னத்தாய் என்ற 2 பெண்களிடம் அவ்வழியாக சென்ற கேரள வனத்துறையினர் சேலையை இழுத்து அத்துமீற முயன்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் தெரிவித்தும் புளியங்குடி வனத்துறை அதிகாரிகள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவதாகவும் பெண்கள் புகார் அளித்துள்ளனர். மேலும் கேரள வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடத்தினர்.


Next Story