குமரி மாவட்டத்தில் அனுமதியின்றி இயங்கிய கேரள சுற்றுலா வேன்கள் பறிமுதல்


குமரி மாவட்டத்தில் அனுமதியின்றி இயங்கிய கேரள சுற்றுலா வேன்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 3 March 2023 6:45 PM GMT (Updated: 3 March 2023 6:45 PM GMT)

குமரி மாவட்டத்தில் அனுமதியின்றி இயங்கிய கேரள சுற்றுலா வேன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கன்னியாகுமரி

குளச்சல்:

குமரி மாவட்டத்தில் கேரள சுற்றுலா வேன்கள் அனுமதி இல்லாமல் இயக்கப்படுவதாக மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு புகார் வந்தது.

அதே சமயம் குளச்சல் அருகே கல்லுக்கூட்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி மாணவர்கள் சுற்றுலா செல்வதற்கு 2 கேரள பதிவெண் கொண்ட வேன்கள் வந்தது. அந்த 2 வேன்களில் மாணவ-மாணவிகள் ஏறினார்கள்.

அப்போது அந்த வழியாக மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அதிகாரி ராஜேஷ் ரோந்து வந்தார். அவர் கேரள பதிவு எண் கொண்ட வேன்களை பார்த்ததும், அவற்றின் ஆவணங்களை ஆய்வு செய்தார். அப்போது அந்த வேன்கள் குமரி மாவட்டத்தில் இயக்குவதற்கு பெர்மிட் பெறவில்லை, தமிழ்நாடு அரசுக்கு வரியும் செலுத்தவில்லை மற்றும் தகுதி சான்றும் பெறவில்லை என்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து வேன்களில் ஏற்றப்பட்ட மாணவர்கள் கீழே இறக்கிவிடப்பட்டனர். பின்னர் 2 வேன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story