கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்ற 3 பேர் கைது
சாயர்புரத்தில் கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சாயர்புரம்:
சாயர்புரம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக சாயர்புரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் சாயர்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரிஜமீந்தா தலைமையில் போலீசார் சாயர்புரம் பஜாரில் சோதனை நடத்தினர். அப்போது தென்காசி மாவட்டம் சாம்பார் வடகரையை சேர்ந்த வெங்கடேஷ் மகன் சக்தி கிருஷ்ணன் (வயது21), தூத்துக்குடி மங்கலாபுரம் கோபால் மகன் இசக்கிராஜா(33), சிவத்தையாபுரம் ராமலிங்கம் மகன் ரகு(50) ஆகிய 3 பேரும் தடைசெய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தனர். அந்த 3 பேரையும் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். இதுதொடர்பாக சாயர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்ட 3 பேரும், பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர்.