கேரள வாலிபர் கைது


கேரள வாலிபர் கைது
x
தினத்தந்தி 25 Dec 2022 12:15 AM IST (Updated: 25 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

300 கிலோ குறுமிளகு திருடிய கேரள வாலிபர் கைது செய்யப்பட்டார்.

நீலகிரி

பந்தலூர்,

பந்தலூர் தாலுகா கையுன்னி அருகே போத்துகொல்லி பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பத்ரோஸ் என்பவரது கடையை உடைத்து 100 கிலோ குறுமிளகு, 40 கிலோ பாக்குகள் திருடு போனது. இதேபோல் மோகன்தாஸ் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 200 கிலோ குறுமிளகு திருடப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் எருமாடு போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தனர். நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் உத்தரவின் படி, தேவாலா போலீஸ் துணை சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் சேரம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா, எருமாடு சப்-இன்ஸ்பெக்டர்கள் வேலுசாமி, மோகன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில் மேற்கண்ட 2 இடங்களில் திருட்டில் ஈடுபட்டது கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் வைத்திரி பகுதியை சேர்ந்த பிலீப் (வயது 34) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிலீப்பை கைது செய்தனர்.


Next Story