தலைமறைவாக இருந்த கேரள வாலிபர்கள் கைது


தலைமறைவாக இருந்த கேரள வாலிபர்கள் கைது
x

கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த தலைமறைவாக இருந்த கேரள வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூர் பகுதியில் கடந்த 2014-ம் ஆண்டு சட்டவிரோதமாக எரி சாராயம் விற்பனையில் ஈடுபட்ட வழக்கில் கேரள மாநிலம் பத்தினம்திட்டா, மஞ்சு பவனத்தை சேர்ந்த பிரேம்ஜி ராஜன் (வயது 43), ஜாபர் (34) ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

அதன் பிறகு பிரேம்ஜி ராஜன் 1½ வருடமாகவும், ஜாபர் 2 மாதமாகவும் கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தனர். அவர்களுக்கு கோர்ட்டில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து சீதபற்பநல்லூர் போலீசார் நேற்று 2 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.


Next Story