தேசிய அளவிலான கேரம் போட்டி


தேசிய அளவிலான கேரம் போட்டி
x
திருப்பூர்


தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்டம் மற்றும் மாணவர் அணி சார்பில் க.முத்தம்மாள் நினைவு கோப்பை தேசிய அளவிலான ஆண்கள் ஒற்றையர் கேரம் போட்டி (தம்பிங்) நேற்று காலை குலாலர் திருமண மண்டபத்தில் தொடங்கியது. மாவட்ட நிர்வாகி திலகராஜ் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. போட்டியை தொடங்கிவைத்தார். மேயர் தினேஷ்குமார், தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், முன்னாள் கவுன்சிலர் சிவபாலன், வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கோபிநாத் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த போட்டியில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வீரர்கள் பங்கேற்றனர். மொத்தம் 192 அணியினர் பங்கேற்று விளையாடினார்கள். நாக்அவுட் முறையில் போட்டிகள் நடைபெற்றன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது. முதல் பரிசாக ரூ.30 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.15 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.10 ஆயிரம், 4-வது பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

1 More update

Next Story