ரூ.98¾ லட்சத்தில் கதர் கிராம விற்பனை கூடம்


ரூ.98¾ லட்சத்தில் கதர் கிராம விற்பனை கூடம்
x

பள்ளிகொண்டாவில் ரூ.98¾ லட்சத்தில் கதர் கிராம விற்பனை கூடத்தை அமைச்சர் ஆர்.எஸ்.கண்ணப்பன் திறந்து வைத்தார்.

வேலூர்

அணைக்கட்டு

வேலூர் மாவட்டம் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகில் கதர் வாரியத்திற்கு சொந்தமான பள்ளிகொண்டா தச்சு கருமார அலகின் முன்புறம் கதர் கிராம பொருட்களுடன் இயற்கையான பனைப் பொருட்களை பொதுமக்கள் விரும்பி வாங்கும் வண்ணம் விற்பனை வளாகம் அமைக்கப்படும் என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி 20021-22-ம் ஆண்டு அறிவித்தார்.

இதனைத்தொடர்ந்து பொதுப்பணித்துறையினரால் ரூ.98 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் கதர் கிராம பொருட்கள் மற்றும் பனைப் பொருட்கள் விற்பனை கண்காட்சி கூடம் கட்டப்பட்டுள்ளது.

இதனை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் கதர் கிராம தொழில் வாரிய துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன் இன்று காலை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு கதர்கிராம தொழில் வாரிய தலைமை செயல் அலுவலர் சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story