கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்துகாங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்
சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், தனியார் அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் ஈரோடு மாநகர் மாவட்ட மகளிர் அணி சார்பில் ஈரோடு ஈ.வி.கே. சம்பத் ரோட்டில் உள்ள மாநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மகளிர் அணி மாவட்ட தலைவர் ஞானதீபம் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் ராஜேஷ் ராஜப்பா, சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் ஜவஹர் அலி, வக்கீல் பிரிவு மாநில செயலாளர் சி.எம்.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநகர் மாவட்ட பொறுப்பாளர் திருசெல்வம் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினாா். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட மண்டல தலைவர்கள் விஜயபாஸ்கர், ஜாபர் சாதிக், தினேஷ், ஊடக பிரிவு தலைவர் முகமது அர்சத், நிர்வாகிகள் விஜய்கண்ணா, கே.என்.பாஷா, குப்பண்ணா சந்துரு உள்பட பலர் கலந்துகொண்டு சமையல் கியாஸ் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினார்கள்.






