புதுப்பெண் உள்பட 2 பேர் கடத்தலா?


புதுப்பெண் உள்பட 2 பேர் கடத்தலா?
x

புதுப்பெண் உள்பட 2 பேர் கடத்தல் சம்பந்தமாக போலீசார் விசாணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை

கீரனூர் அருகே பங்குனி வயலை சேர்ந்தவர் சின்னையா. இவரது மகள் நதியா (வயது 21). இவருக்கும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சோமசுந்தரம் என்பவருக்கும் கடந்த ஆகஸ்டு மாதம் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னர் குடும்ப பிரச்சினை காரணமாக நதியா அவரது பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். இந்நிலையில் நேற்று கீரனூருக்கு சென்ற நதியா வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து சின்னையா உடையாளிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாயழகு வழக்குப்பதிவு செய்து, நதியாவை யாரும் கடத்தி சென்றனரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேேபால் கீரனூர் அருகே ஆயக்குடிவயல் கிராமத்தை சேர்ந்தவர் பழனியப்பன் மகள் சுபலட்சுமி (24). இவர், திருச்சியில் உள்ள மருந்து கடையில் வேலை பார்த்து வருகிறார். வேலைக்கு சென்ற சுபலட்சுமி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து பழனியப்பன் கீரனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து சுபலட்சுமியை யாரும் கடத்தி சென்றனரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story