காரில் கடத்தி வரப்பட்ட 222 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் 2 வாலிபர்கள் கைது


காரில் கடத்தி வரப்பட்ட 222 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்  2 வாலிபர்கள் கைது
x

காரில் கடத்தி வரப்பட்ட 222 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு

காரில் கடத்தி வரப்பட்ட 222 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

புகையிலை பொருட்கள்

ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தலைமையில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று ஈரோடு மூலப்பட்டறை பார்க் ரோடு பகுதியில் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காரை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். சோதனையின்போது அந்த காரில் மூட்டை, மூட்டையாக, தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

2 வாலிபர்கள் கைது

இதைத்தொடர்ந்து காரில் இருந்த 2 வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், ஈரோடு பிருந்தா வீதியை சேர்ந்த சர்வன்ராஜ் (வயது 28), ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் அருகே உள்ள அகாரே பகுதியை சேர்ந்த பிரகலாத்குமார் (25) ஆகியோர் என்பதும், இவர்கள் 2 பேரும் புகையிலை பொருட்களை காரில் கடத்தி விற்பனைக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து போலீசார் 2 பேரையும் கைது செய்து கோர்ட்டு உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 222 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டன.


Related Tags :
Next Story