கார், மொபட்டில் கடத்தப்பட்ட 15 மூட்டை புகையிலை பொருட்கள் பறிமுதல்


தினத்தந்தி 21 Nov 2022 12:15 AM IST (Updated: 21 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

சிக்கலில் இருந்து தூத்துக்குடிக்கு கார், மொபட்டில் கடத்தப்பட்ட 15 மூட்டை புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

ராமநாதபுரம் சிக்கலில் இருந்து தூத்துக்குடிக்கு கார், ெமாபட்டில் கடத்தப்பட்ட 15 மூட்டைகளில் இருந்த 750 பண்டல் புகையிலை பொருட்களை சூரங்குடி போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

போலீசார் வாகன சோதனை

விளாத்திகுளம் அருகை சூரங்குடி பகுதியில் உள்ள வேம்பார் சோதனை சாவடியில், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரையும், அதை பின் தொடர்ந்து வந்த மொபட்டையும் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நத்தினர்.

அவற்றில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் 15 மூட்டைகளில் 750‌ பண்டல்கள் கடத்தி வந்ததது தெரியவந்துள்ளது.

3 பேர் கைது

புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் கார், மொபட்டில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் பகுதியை ேசர்ந்த கேப்ரியல் வயது (வயது 34), அப்துல் அலி வயது (52) அஜ்மீர் காஜா(39) ஆகியோர் என தெரிய வந்தது. அவர்கள் சிக்கலில் இருந்து தூத்துக்குடிக்கு கார், மொபட்டில் புகையிலை பொருட்களை கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.90 ஆயிரமாகும்.

கார், மொபட் பறிமுதல்

இது தொடர்பாக சூரங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கார், மொபட்டையும் பறிமுதல் செய்தனர். மேலும் இவற்றை கடத்தி வந்த கேப்ரியல் உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story