சிறுமியை கடத்திய வாலிபர் கைது


சிறுமியை கடத்திய வாலிபர் கைது
x

திட்டக்குடி அருகே சிறுமியை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கடலூர்


ராமநத்தம்,

திட்டக்குடி பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. சம்பவத்தன்று வீட்டில் இருந்த சிறுமியை காணவில்லை. இதுகுறித்து அவரது தாய் திட்டக்குடி அனைத்து மகளிர் போலீசில், தனது மகளை யாரோ கடத்தி சென்றுவிட்டதாக புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

அதில், சேலம் மாவட்டம் தலைவாசல் நத்தகரையை சேர்ந்த வேல்முருகன் மகன் தர்மன் (வயது 20) என்பவர், திட்டக்குடி பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்து நெல் அறுவடை எந்திரத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர், சிறுமியை கடத்தி சென்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தலைவாசலுக்கு விரைந்து சென்று போக்சோ சட்டத்தின் கீழ், தர்மனை கைது செய்து சிறுமியை மீட்டு கடலூரில் உள்ள காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

1 More update

Next Story