கல்லூரி மாணவி கடத்தல்?
கல்லூரி மாணவி கடத்தப்பட்டாரா என்பது குறித்து போலீசாா் விசாாித்து வருகின்றனா்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் 20 வயது இளம் பெண். இவர் தலைவாசலில் உள்ள தனியார் கல்லூரியில் பியூட்டிசியன் பாடப்பிரிவு படித்து வருகிறார். சம்பவத்தன்று காலை வீட்டில் இருந்து சென்ற இவரது பெற்றோர், இரவு 9 மணிக்கு வீட்டுக்கு வந்தனர். அப்போது, அங்கு இருந்த அவரது மகளை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தாய் அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கல்லூரி மாணவியை யாரேனும் கடத்தி சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story