மார்த்தாண்டம் அருகே பிளஸ்-1 மாணவி கடத்தல்; போலீசார் விசாரணை

மார்த்தாண்டம் அருகே பிளஸ்-1 மாணவி கடத்தல்; போலீசார் விசாரணை
x

மார்த்தாண்டம் அருகே பிளஸ்-1 மாணவி கடத்தப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி

குழித்துறை,

மார்த்தாண்டம் அருகே பிளஸ்-1 மாணவி கடத்தப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடத்தல்

மார்த்தாண்டம் அருகே உள்ள மஞ்சாலுமூடு பகுதியை சேர்ந்த 16 வயதுடைய மாணவி அண்டுகோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இந்த மாணவி சம்பவத்தன்று காலையில் வழக்கம் போல் பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். ஆனால் மாலையில் அவர் வீட்டுக்கு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து மாணவியின் தாயார் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரில் தனது மகளை யாரோ கடத்தி சென்று இருக்கலாம் என்று கூறியுள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகிறார்கள்.

Next Story