பிளஸ்-1 மாணவி கடத்தல்


பிளஸ்-1 மாணவி கடத்தல்
x
தினத்தந்தி 24 Nov 2022 12:15 AM IST (Updated: 24 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

பிளஸ்-1 மாணவி கடத்தல்

கன்னியாகுமரி

குளச்சல்:

குளச்சல் அருகே உள்ள ஒரு மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது மாணவி. இவர் மணவாளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாணவி தனது பெரியப்பா வீட்டிற்கு சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். அதன்பிறகு அவர் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் அக்கம் பக்கத்திலும், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. மாணவியின் பெற்றோர் விசாரித்ததில் மாணவியை மதுரை வாழைதோப்பு பகுதியை சேர்ந்த வாலிபர் அழகர்சாமி (வயது 25) என்பவர் கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து மாணவியின் தாயார் குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் அழகர்சாமி மீது கடத்தல் பிரிவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.


Next Story