காதல் திருமணம் செய்த இளம்பெண் காரில் கடத்தல்


காதல் திருமணம் செய்த இளம்பெண் காரில் கடத்தல்
x

பாலக்கோடு அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை காரில் கடத்தி சென்ற தாயார் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தர்மபுரி

பாலக்கோடு

காதல்

நல்லம்பள்ளி அருகே மூக்கனஅள்ளி கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் (வயது22). லாரி உரிமையாளர். இவரும், பாலக்கோடு அருகே மண்டுகொட்டாய் கிராமத்தை சேர்ந்த கலைவாணி என்பவரின் மகள் மதுஸ்ரீ (21) என்பவரும் காதலித்து வந்தனர். இதையறிந்த மதுஸ்ரீயின் பெற்றோர் அவருக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய மாப்பிள்ளை பார்த்தனர்.

இதனால் அவர் வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் பங்காருபேட்டையில் ள்ள சிவன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் காதல் தம்பதி பெங்களூரு சந்திராபுரத்தில் வாடகை வீடு எடுத்து வசித்து வந்தனர். இதுகுறித்து மதுஸ்ரீயின் தாயார் பாலக்கோடு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து நேற்று காதலர்கள் 2 பேரும் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர்.

காரில் கடத்தல்

இதையறிந்து மதுஸ்ரீயின் தாயார் கலைவாணி உறவினர்களுடன் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அவர் மகளை வீட்டுக்கு வரும்படி வற்புறுத்தினார். ஆனால் மதுஸ்ரீ கணவனுடன் தான் செல்வன் என போலீசாரிடம் எழுத்து மூலம் தெரிவித்து விட்டு காரில் தர்மபுரி நோக்கி சென்றார்.

அவர்களை பின்தொடர்ந்து சென்ற கலைவாணி, உறவினர்கள் சீனிவாசன், கோபாலகிருஷ்ணன், கீதா ஆகியோர் கடமடை அருகே காதல் தம்பதி சென்ற காரை வழிமறித்து மதுஸ்ரீயை கடத்தி சென்றனர். இதுகுறித்து மதுஸ்ரீயின் விக்னேஷ் பாலக்கோடு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் கலைவாணி உள்பட 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story