வீட்டிற்குள் சடலம் கொன்று புதைப்பா?
வீட்டிற்குள் சடலம் கொன்று புதைப்பா?
அனுப்பர்பாளையம்
திருப்பூரில் வீட்டிற்குள் சடலம் ெகான்று புதைக்கப்பட்டதா? என்று போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் அந்தவீட்டிற்குள் தோண்டி ஆய்வு செய்து வருகிறார்கள். இதனால் திருப்பூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வியாபாரி
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் மணி (வயது 40). இவர் திருப்பூர் செட்டிபாளையம் தியாகிகுமரன் காலனியில் உள்ள ஒரு ஓட்டு வீட்டில் மனைவி, 2 பெண் குழந்தைகள் மற்றும் தனது தாயாருடன் வசித்து வந்தார். இவர் தள்ளுவண்டியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்து வந்தார். இந்த நிலையில் இவர் குடியிருந்த வீடு கடந்த 4 நாட்களாக வெளிப்புறம் பூட்டப்பட்டிருந்தது. வீட்டிற்கு வெளியே அவர் வளர்த்த நாய் மட்டும் கட்டப்பட்டிருந்தது.
இந்த நிைலயில் பூட்டிய வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அந்த பகுதி பொதுமக்களுக்கு தெரியவந்தது. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் கமிஷனர் பிரபாகரன், ஆர்.டி.ஓ. பண்டரிநாதன், போலீஸ் துணை கமிஷனர் அபிநவ்குமார், உதவி கமிஷனர்கள் அனில்குமார், நல்லசிவம் மற்றும் போலீசார் அந்த வீட்டிற்கு சென்றனர்.
குழிதோண்டி...
பின்னர் வீட்டின் கதவில் உள்ள பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது வீட்டிற்குள் புதியதாக ஒரு இடத்தில் சவக்குழி போன்று மண் ேபாடப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பகுதியை தோண்டினர். அப்போது குழிக்குள் இருந்து செல்போன் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. குறிப்பிட்ட ஆழம் வரை தோண்டியும் மனித உடல் எதுவும் கிடைக்வில்லை. ஆனாலும் வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் அதிகமாக வீசுகிறது. எனவே போலீசார் தொடர்ந்து அந்த குழியை தோண்டி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் திருப்பூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் நேற்று முன்தினம் அந்த பகுதியில் வாலிபர் ஒருவரின் உடல் எரிந்த நிலையில் கிடந்ததால் போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அந்த மோப்பநாய் அங்கிருந்து மோப்பம் பிடித்து தற்போது உடல் புதைக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் வீட்டை சுற்றி சுற்றி வந்தது. எனவே ஏற்கனவே எரித்துக்கொலை செய்யப்பட்ட வாலிபருக்கும், தப்போது தூர்நாற்றம் வருவதால் தோண்டப்படும் வீட்டிற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள். மேலும் மணி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் எங்கு சென்றார் என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.