கிள்ளிடி கண்மாயில் மீன்பிடி திருவிழா
கிள்ளிடி கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
பொன்னமராவதி அருகே தொட்டியம்பட்டி ஊராட்சி, கட்டையாண்டிபட்டி கிள்ளிடி கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. கோடை காலத்தில் விவசாய கண்மாய்களில் நீர்மட்டம் குறைந்து வரும் நிலையில் விவசாயம் செழிக்கவும், மழை பெய்யவும் வேண்டி நடந்த மீன்பிடி திருவிழாவில் கட்டையாண்டிபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் ஏராளமானோர் கண்மாயில் ஒன்றிணைந்தனர். பின்னர் ஊர் முக்கியஸ்தர்கள் கண்மாய் கரையில் வெள்ளை துண்டு வீசி மீன்பிடி திருவிழாவை தொடங்கி வைத்தனர். இதைதொடர்ந்து அங்கு கூடியிருந்த ஏராளமான பொதுமக்கள் ஊத்தா, தூரி, கச்சா, வலை உள்ளிட்டவைகளை பயன்படுத்தி மீன்பிடித்தனர். அப்போது அவர்களுக்கு கெண்டை, கெளுத்தி, விரால், அயிரை உள்ளிட்ட பலவகை மீன்கள் கிடைத்தது. இதையடுத்து தங்களுக்கு கிடைத்த மீன்களை பொதுமக்கள் உற்சாகத்துடன் வீட்டிற்கு எடுத்து சென்று சமைத்து சாப்பிட்டனர்.