கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு


கிணத்துக்கடவு காய்கறி சந்தையில்   தக்காளி விலை கிடுகிடு உயர்வு
x

கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை கிடுகிடுெவன உயர்ந்து உள்ளது.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை கிடுகிடுெவன உயர்ந்து உள்ளது.

தக்காளி கொள்முதல்

கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் தக்காளி விவசாயம் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. அதன்படி கிணத்துக்கடவு சொக்கனூர், முத்துகவுண்டனூர், நெம்பர் 10 முத்தூர், வடபுதூர், கல்லாபுரம், சிங்கையன்புதூர், நல்லட்டிபாளையம் உள்ளிட்ட பல கிராம பகுதிகளில் தக்காளி பயிரிட்டுள்ளனர்.

விவசாயிகள் தரிசு மற்றும் மானாவாரி நிலங்களில் பயிரிட்டுள்ள தக்காளிகள் தற்போது காய்ப்புக்கு வந்துள்ளதால் கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தைக்கு தக்காளி வரத்து தற்போது அதிகரித்துள்ளது.

தற்போது கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளில் விளையும் தக்காளிகள் கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைமற்றும் அருகில் உள்ள கேரள மாநிலங்களுக்கு தக்காளி வியாபாரிகள் கொள்முதல் செய்து எடுத்து செல்கின்றனர்.

விலை உயர்வு

தக்காளி உற்பத்தி தொடங்கி உள்ள நிலையில், தொடர்ந்து மழை பெய்து வருவதால், பெரும்பாலான கிராமங்களில் செடிகளில் காய்த்திருந்த தக்காளிகள் சேதமடைந்து சில செடிகளில் பழங்கள் அழகியும் சேதமடைந்துள்ளது. ஆனாலும் கிணத்துகடவு தினசரி காய்கறி சந்தைக்கு தக்காளி வரத்து அதிகளவில் உள்ளது.

நேற்று நடைபெற்ற ஏலத்தில் கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தைக்கு மொத்தம் 1000 பெட்டிகளுக்கு மேல் தக்காளி விற்பனைக்கு வந்திருந்தது. ஆனால் ஒரு கிலோ தக்காளி 37 ரூபாய் 50 காசுக்கு ஏலம்போனது.

இது கடந்த மாதத்தை விட ஒரு கிலோவிற்கு 30-ரூபாய் அதிகமாகும்.தினசரி காய்கறி சந்தையில் தக்காளி விலை தொடர்ந்து கடந்த சில நாட்களாக அதிகரித்து வருவதால் தற்காளிகளை விற்பனைக்கு கொண்டு வந்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.


Next Story