மன்னர் கல்லூரி மாணவர்கள் தேர்வு
முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் மன்னர் கல்லூரி மாணவர்கள் தேர்வு பெற்றனர்.
திருப்பரங்குன்றம்,
மதுரை மாவட்ட அளவில் கல்லூரிகளுக்கு இடையே பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. அதில் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி மாணவர்கள் பாலமுருகன், யுகேஸ், அபிஜேக், அப்துல் ரகுமான் ஆகிய 4 பேர் கால்பந்து போட்டியிலும், கோபி, பிரவீன், சந்தோஸ், விஜயபிரபாகரன் ஆகிய 4 மாணவர்கள் கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்று தங்களது அணியை வெற்றிபெற செய்து பதக்கங்கள் மற்றும், பாராட்டு சான்றிதழ்களை பெற்றனர். மேலும் சென்னையில் மாநில அளவில் நடைபெற உள்ள முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் 8 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதனையொட்டி கல்லூரியில் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி தலைவர் எஸ். ராஜகோபால் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் அ.ராமசுப்பையா முன்னிலை வகித்தார். விழாவில் கல்லூரி, செயலர் விஜயராகவன் மாணவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் கல்லூர ிஉதவி செயலர் கே.ராஜேந்திரபாபு, பொருளாளர் ஆழ்வார் சாமி, சுயநிதி இயக்குனர் பிரபு, உடற்கல்வி இயக்குனர் ராகவன், உதவி இயக்குனர் கோவிந்தம்பாள் மற்றும் உதவி பேராசிரியர்கள், பேராசிரியைகள் கலந்துகொண்டனர்.