மன்னர் சரபோஜி கல்லூரி ஆண்டு விழா


மன்னர் சரபோஜி கல்லூரி ஆண்டு விழா
x

மன்னர் சரபோஜி கல்லூரி ஆண்டு விழா நடந்தது.

தஞ்சாவூர்

தஞ்சை சரபோஜி அரசு கல்லூரியின் 68-வது ஆண்டு விழா கல்லூரி முதல்வர் ரோசி தலைமையில் நடந்தது. விழாவில் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டி பேசினார். ஈரோடு மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் சிறப்புரையாற்றினார். தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். இதைத்தொடர்ந்து பல்கலைக்கழக அளவில் தரவரிசை பெற்ற மாணவர்கள், கவின்கலை, விளையாட்டு போட்டிகள் மற்றும் தேசிய மாணவ படையில் சிறந்து விளங்கிய 189 பேருக்கு அறக்கட்டளை மூலமாக மொத்தம் ரூ.10 லட்சத்து 25 ஆயிரம் வழங்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் கல்லூரி அளவில் சிறந்து விளங்கிய 485 மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. முன்னதாக வரலாற்று துறை தலைவர் கோவிந்தராசு வரவேற்றார். முடிவில் தேர்வு நெறியாளர் செயக்குமார் நன்றி கூறினார். விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story