கீரம்பூர் ஏரி நிரம்பி வழிந்தது


கீரம்பூர் ஏரி நிரம்பி வழிந்தது
x

கீரம்பூர் ஏரி நிரம்பி வழிந்தது.

திருச்சி

துறையூர்:

துறையூரில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதேபோல் துறையூரை அடுத்துள்ள பச்சைமலை பகுதியிலும் கன மழை பெய்து, ஆங்காங்கே உள்ள அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. அம்மம்பாளையம் வரையாற்றில் உள்ள நீர்வீழ்ச்சியில் அதிக அளவு நீர் வரத்தால் வரையாற்றில் வெள்ளம் ஓடுகிறது. மேலும் கீரம்பூரில் உள்ள பெரிய ஏரியில் நீர் நிரம்பி கடைக்கால் வழியாக வழிந்து ஓடுகிறது. இதைக்கண்ட பொதுமக்கள் கடைக்காலில் மாலை அணிவித்து பூசணிக்காய் உடைத்து, மலர்தூவி பாசனத்திற்கு நீரை திறந்து விட்டனர்.


Next Story