கீரனூர் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை


கீரனூர் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
x

கீரனூர் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட அளவில் நடைபெற்ற தடகள போட்டியில் கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு முதலிடத்தை பிடித்து மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள தேர்வாகி உள்ளனர். 9-ம் வகுப்பு மாணவன் செந்தில்நாதன் 600 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும், 8-ம் வகுப்பு மாணவன் கண்ணன் சிலம்பப் போட்டியிலும், 12-ம் வகுப்பு மாணவர்கள் அரவிந்த், ஜாகிர் உசேன், வீரமணி ஆகியோர் நீச்சல் போட்டியிலும் வெற்றி பெற்று மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொண்டு விளையாட உள்ளனர். அதேபோல் 8-ம் வகுப்பு மாணவர்கள் லிவ்ய நாதன், வருண்பிரசித் ஆகியோர் 24 மணி நேரமும் சிலம்பம் சுற்றி நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்ட தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டு துறை சார்பில் கலைஞர், அண்ணா பிறந்தநாள் பேச்சுப் போட்டியில் மாவட்ட அளவில் முதல் பரிசை 12-ம் வகுப்பு மாணவர் பீர்முகமது பெற்றுள்ளார். இதையடுத்து மாணவர்களின் சாதனையை பாராட்டும் விதமாக பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் முருகன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஒய்யப்பன், தாமரைச்செல்வன் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டினர். முன்னதாக ஆசிரியர் ரமேஷ் வரவேற்றார். முடிவில் ஆசிரியர் தங்கம் நன்றி கூறினார்.


Next Story