கீரனூர்-கிள்ளுக்கோட்டை ரெயில்வே கேட் இன்று மூடல்


கீரனூர்-கிள்ளுக்கோட்டை ரெயில்வே கேட் இன்று மூடல்
x

பராமரிப்பு பணிகள் காரணமாக கீரனூர்-கிள்ளுக்கோட்டை ரெயில்வே கேட் இன்று (வியாழக்கிழமை) மூடப்படுகிறது.

புதுக்கோட்டை

கீரனூர்-கிள்ளுக்கோட்டை செல்லும் ரெயில் தண்டவாளம் பகுதியில் பராமரிப்பு பணிகள் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை ரெயில்வே கேட் மூடப்பட்டிருக்கும் எனவும், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மாற்றுப்பாதையில் செல்வதற்காக பள்ளத்துப்பட்டி ரெயில்வே சுரங்கப்பாதையில் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story