புதிய சமையல் அறை கட்டிடம்


புதிய சமையல் அறை கட்டிடம்
x
தினத்தந்தி 8 Jun 2023 12:15 AM IST (Updated: 8 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

புதிய சமையல் அறை கட்டிடத்தை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்தார்

சிவகங்கை

திருப்பத்தூர்

கல்லல் ஒன்றியத்திற்குட்பட்ட பாதரக்குடியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்ட சமையல் அறை கட்டிட திறப்பு விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். கூட்டுறவு துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டு சமையல் அறை கட்டிடத்தினை திறந்து வைத்து பேசினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் தென்னவன், கல்லல் ஒன்றியக்குழு தலைவர் சொர்ணம் அசோகன், கல்லல் ஒன்றிய செயலாளர் குன்றக்குடி சுப்ரமணியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் ரவி, கண்டரமாணிக்கம் தொழில் அதிபர் மணிகண்டன் செட்டியார், ஒன்றிய கவுன்சிலர் மருதுபாண்டியன், திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கிராம மக்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.


Next Story