விழுப்புரத்தில் சமையலறை கட்டுமான பணிகள்


விழுப்புரத்தில் சமையலறை கட்டுமான பணிகள்
x

விழுப்புரத்தில் சமையலறை கட்டுமான பணிகளை கலெக்டர் மோகன் ஆய்வு மேற்கொண்டார்.

விழுப்புரம்

விழுப்புரம்,

அரசு பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். விழுப்புரம் நகராட்சியில் உள்ள 13 நகராட்சி தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் வகையில் விழுப்புரம் காமராஜ் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும், நரசிங்கபுரம் குடிநீர் மேல்நீலை நீர்த்தேக்க தொட்டி அருகிலும் தலா ரூ.23.60 லட்சம் மதிப்பில் சமையலறை கூடங்கள் கட்டப்பட்டு வருகிறது.

இந்த பணிகளை எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் லட்சுமணன், புகழேந்தி ஆகியோர் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் மோகன், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார்.

இதுபற்றி கலெக்டர் மோகன் கூறுகையில், காமராஜ் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் உள்ள சமையலறை கூடத்திலிருந்து 7 தொடக்கப்பள்ளிகளுக்கும், நரசிங்கபுரம் பகுதியில் உள்ள சமையலறை கூடத்தில் இருந்து 6 தொடக்கப்பள்ளிகளுக்கும் என மொத்தம் 13 தொடக்கப்பள்ளிகளுக்கும் இங்கிருந்து காலை சிற்றுண்டி எடுத்துச்செல்லும் வகையில் சமையலறை கூடங்கள் கட்டப்பட்டு பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளன. விரைவில் இத்திட்டம் தொடங்கும்போது இங்கிருந்து காலை சிற்றுண்டிகள் குழந்தைகளுக்கு வழங்கும் வகையில் நகராட்சி நிர்வாகம் பணிகளை விரைந்து மேற்கொண்டு வருகிறது என்றார். இந்த ஆய்வின்போது விழுப்புரம் நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, பொறியாளர் ஜோதிமணி, நகராட்சி மேற்பார்வை அலுவலர் ஹரிஹரன் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story