அந்தியூரில் கொ.ம.தே.க. மோட்டார்சைக்கிள் ஊர்வலத்துக்கு போலீசார் அனுமதி மறுப்பு


அந்தியூரில் கொ.ம.தே.க. மோட்டார்சைக்கிள் ஊர்வலத்துக்கு போலீசார் அனுமதி மறுப்பு
x

அந்தியூரில் கொ.ம.தே.க. மோட்டார்சைக்கிள் ஊர்வலத்துக்கு போலீசார் அனுமதி மறுப்பு

ஈரோடு

அந்தியூர்

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஈரோடு மலை மாவட்டம் சார்பில் அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட 14 இடங்களில் நேற்று கொடியேற்று விழா நடைபெறுவதாக இருந்தது. இதற்காக மோட்டார்சைக்கிள் ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கொடியேற்று விழாவிற்கு அனுமதி கொடுத்த போலீசார் மோட்டார்சைக்கிள் ஊர்வலத்துக்கு அனுமதி தரவில்லை. இந்நிலையில் கொடியேற்று விழா மற்றும் மோட்டார்சைக்கிள் ஊர்வலத்துக்காக கொ.ம.தே.க.வினர் சுமார் 100 பேர் பத்ரகாளி அம்மன் கோவில் முன்பு மோட்டார்சைக்கிளில் திரண்டனர்.

அப்போது அங்கு திரண்டிருந்த போலீசார், இவர்களை பேரணி செல்லக்கூடாது என தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அக்கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளர் சூரியமூர்த்தி போலீசாருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் போலீசாரிடம், 'தாங்கள் மோட்டார்சைக்கிள் ஊர்வலத்துக்கு செல்லவில்லை. தங்களது கட்சியினர் அந்தந்த பகுதிக்கு செல்ல மட்டும் அனுமதி அளிக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து மோட்டார்சைக்கிளை இரண்டு இரண்டாக சிறிது நேரம் இடைவெளி விட்டு போலீசார் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொடியேற்று விழா நடைபெற்றது.


Next Story