மண்டல செஸ் போட்டிக்கு கே.எம்.ஜி. கல்லூரி மாணவர் தேர்வு

மண்டல செஸ் போட்டிக்கு கே.எம்.ஜி. கல்லூரி மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வேலூர்
தெற்கு மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான செஸ் போட்டியில் பங்கேற்க திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் சார்பில் குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த இளநிலை இரண்டாமாண்டு கணிதவியல் மாணவர் டி.ஆர். நிஷாந்த்ராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம். தொழில்நுட்ப நிறுவனத்தில் இன்று (வியாழக்கிழம) முதல் 12-ந் தேதி வரை நடைபெறவுள்ள செஸ் போட்டியில் பங்கேற்க உள்ள மாணவர் நிஷாந்த்ராஜை கல்வி நிறுவனங்களின் மேலாண்மை அறங்காவலர் கே.எம்.ஜி. பாலசுப்பிரமணியன், தலைவர் கே.எம்.ஜி.சுந்தரவதனம், செயலாளர் கே.எம்.ஜி.ராஜேந்திரன், கல்லூரி முதல்வர் மு.செந்தில்ராஜ், உடற்கல்வி இயக்குனர்கள் ஆர்.ரஞ்சிதம், பி.ஞானகுமார் ஆகியோர் பாராட்டினர்.
Related Tags :
Next Story






