கே.என்.பாளையம் துணை சுகாதார நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை


கே.என்.பாளையம்   துணை சுகாதார நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை
x

கே.என்.பாளையம் துணை சுகாதார நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டார்கள்.

ஈரோடு

டி.என்.பாளையம்

கே.என்.பாளையம் துணை சுகாதார நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டார்கள்.

முற்றுகை

டி.என்.பாளையம் அருகே உள்ள கே.என்.பாளையத்தில் அரசு துணை சுகாதார நிலையம் உள்ளது. நேற்று காலை 8 மணியளவில் இந்த சுகாதார நிலையத்துக்கு அதே பகுதியை சேர்ந்த பெற்றோர் ஒருவர் தங்களுடைய குழந்தைக்கு வயிற்று போக்கு இருப்பதபாக கூறி அழைத்து வந்தார்கள். ஆனால் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் கிடைத்ததும் அரசு மருத்துவ அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பங்களாப்புதூர் போலீசார் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

கே.என்.பாளையம் அரசு துணை சுகாதார நிலையத்தில் போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறையால் எந்நேரமும் மருத்துவம் பார்க்க இயலாத சூழ்நிலை உள்ளது. இதுகுறித்து மருத்துவ உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதை ஏற்றுக்கொண்டு கலைந்து சென்றார்கள்.


Related Tags :
Next Story