முன்விரோதம் காரணமாக கணவன்- மனைவிக்கு கத்தி வெட்டு


முன்விரோதம் காரணமாக கணவன்- மனைவிக்கு கத்தி வெட்டு
x

பாணாவரம் அருகே முன்விரோதம் காரணமாக கணவன்- மனைவிக்கு கத்தி வெட்டு விழுந்தது.

ராணிப்பேட்டை

பாணாவரத்தை அடுத்த எலத்தூர் கொள்ளுமேடு கிராமத்தில் குட்டைக்கார தெருவில் வசிக்கும் சுப்பிரமணி என்பவரின் மகன் ஞானப்பிரகாஷ் (வயது 30). விவசாய கூலி வேலை செய்துவருகிறார். இவருக்கும் அதே ஊரை சேர்ந்த மாணிக்கம் மகன் சீதாராமன் (27) என்பவருக்கும் முன்விரோதம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்தநிலையில் நேற்று இரவு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அப்போது சீதாராமன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஞானப்பிரகாஷ், அவரது மனைவி ஜீவா (27) ஆகியோரை குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து பாணாவரம் சப்- இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story