கொடைக்கானல் கோடை விழா விளையாட்டு போட்டி - அசத்திய பெண்கள்...!


கொடைக்கானல் கோடை விழா விளையாட்டு போட்டியில் பெண்கள் கலந்து கொண்டு அசத்தி உள்ளனர்.

திண்டுக்கல்

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் குளு,குளு சீசனையொட்டி கோடை விழா, மலர் கண்காட்சி கடந்த 24-ம் தேதி தொடங்குகியது. இந்த கண்காட்சி 6 நாட்கள் நடைபெற உள்ளது.

கோடை விழாவை அமைச்சர்கள் இ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அர.சக்கரபாணி, எம்.மதிவேந்தன் ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கி வைக்கின்றனர். இதையொட்டி பிரையண்ட் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர்களால் உருவாக்கப்பட்ட மயில், டைனோசர், வெள்ளைப்பூண்டு ஆகியவை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனை காண்பதற்காக பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் இன்னிசை நிகழ்ச்சி, பரதநாட்டியம், நடன நாட்டிய நிகழ்ச்சி, மேஜிக் ஷோ, தேவராட்டம், சேவையாட்டம், கயிறு இழுக்கும் போட்டி, பானை உடைக்கும் போட்டிகள் நடைபெற்றது.

இந்த போட்டியில் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப்பயணிகள் கலந்துகொண்டனர். அந்த வகையில் கயிறு இழுக்கும் போட்டியில் கல்லூரி மாணவிகள் வெற்றிபெற்றனர்.

இதேபோன்று அதிகமான ஆண்கள், மற்றும் பெண்கள் கலந்துகொண்ட பானை உடைக்கும் போட்டியில் திண்டுக்கல்லை சேர்ந்த நஸ்ரின் என்ற பெண் நேர்த்தியாகச் சென்று பானையை உடைத்து பரிசு மற்றும் சான்றிதழ் பெற்றார்.

சுற்றுலா வளர்ச்சிக்கழகம், தோட்டக்கலைத்துறை இணைந்து நடத்தும் கோடைவிழா கலைநிகழ்ச்சியை மாவட்ட சுற்றுலா அலுவலர் சிவராஜ் (பொ), கோடைவிழா சிறப்பு சுற்றுலா அலுவலர் பாலமுருகன், உதவி சுற்றுலா அலுவலர் ஆனந்தன், விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ் பாத்திமாமேரி ஆகியோர் முன்னின்று சுற்றுலாப்பயணிகள் மகிழும் வகையில் சிறப்பாக நடத்தினர்.

1 More update

Next Story