கோடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்தாதது ஏன்?பெங்களூரு புகழேந்தி கேள்வி


கோடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்தாதது ஏன்?பெங்களூரு புகழேந்தி கேள்வி
x
சேலம்

சேலம்

சேலத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் பெங்களூரு புகழேந்தி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய விபத்தில் பலியான கனகராஜ், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கார் டிரைவர் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஆனால் கோடநாடு வழக்கை விசாரித்த ஊட்டி நீதிமன்றம், கனகராஜை ஜெயலலிதாவின் கார் டிரைவர் எனவும், அதன்பிறகு அவரை ஜெயலலிதா பணியில் இருந்து நீக்கியுள்ளார் என்றும், அதன்பிறகு அவர் அ.தி.மு.க.வை சேர்ந்த 12 தலைவர்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது. ஜெயலலிதாவின் கார் டிரைவராக கனகராஜ் இல்லை என்று 4 ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவில்லையா? இப்போது ஏன் கூறுகிறார். சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்தால் கனகராஜின் அண்ணன் தனபால் பல தகவல்களை கூறுவேன் என்று தெரிவித்துள்ளார். பிறகு ஏன் எடப்பாடி பழனிசாமியிடம் இதுவரை விசாரணை நடத்தவில்லை. அதற்கு என்ன காரணம்? என்று தெரியவில்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கோடநாடு, கொலை, கொள்ளை வழக்கில் உண்மை வெளிச்சத்துக்கு கொண்டு வரப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தார். ஆனால் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த வேண்டும். முடிந்தால் இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும். காஞ்சீபுரத்தில் அடுத்த மாதம் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் தொடங்க உள்ளோம். அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசுகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story