கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை 29-ந் தேதிக்கு ஒத்திவைப்பு


கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை 29-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
x

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை வரும் 29-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக தற்போது மறு விசாரணை நடந்து வருகிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள 5 தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் பலரிடமும் விசாரணை நடத்தி உள்ளனர்.

இது தொடர்பான வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்று கொடநாடு தொடர்பான வழக்கு ஊட்டியில் உள்ள மகளிர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. விசாரணையையொட்டி சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய திபு என்பவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணையை வருகிற 29-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

1 More update

Next Story