5 நாட்களுக்கு பிறகு கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி


5 நாட்களுக்கு பிறகு கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
x

5 நாட்களுக்கு பிறகு கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு

கடத்தூர்

5 நாட்களுக்கு பிறகு கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொடிவேரி அணை

கோபி அருகே கொடிவேரி அணை உள்ளது. இந்த அணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும்போது தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். மேலும் விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களிலும் சுற்றுலா பயணிகள் அணையில் குவிவார்கள்.

அப்போது அணையில் கொட்டும் தண்ணீரில் குளித்தும், பரிசல் பயணம் மேற்கொண்டும் மகிழ்வார்கள்.

சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணைக்கு வரும் உபரி நீர் பவானி ஆற்று வழியாக அப்படியே வெளியேற்றப்பட்டு வந்தது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அணையில் குளிக்கவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் பொதுப்பணித்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டு இருந்தது

கடந்த 5 நாட்களுக்குப் பிறகு பவானி ஆற்றில் திறந்து விடப்படும் உபரி நீர் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அணையில் குளிக்கவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் பொதுப்பணித்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணைக்கு வரத் தொடங்கியுள்ளனர்.


Next Story