கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்


கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x

கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஈரோடு

கடத்தூர்

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ளது கொடிவேரி அணை. இங்கு சனி, ஞாயிறு ஆகிய கிழமைகள் மற்றும் விடுமுறை நாட்களில் வெளியூர் மற்றும் உள்ளூர்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் பஸ், வேன், கார், இருசக்கர வாகனங்களில் வந்து ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்து செல்வார்கள்.

தற்போது பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவடைந்ததாலும், தொடர் விடுமுறை என்பதாலும் கொடிவேரி அணையில் நேற்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் குவிந்தது. கோடை கால வெப்பத்தை தணிக்க ஆர்ப்பரித்து கொட்டும் அணை தண்ணீரில் குளித்தனர். மேலும் அங்கு விற்கப்படும் சூடான மீன்வறுவல்களை வாங்கி ருசித்துச் சாப்பிட்டு சென்றனர்.


Next Story