கோடியக்காடு குழகர்கோவில் தேரோட்டம்


கோடியக்காடு குழகர்கோவில் தேரோட்டம்
x

வேதாரண்யம் அருகே, கோடியக்காடு குழகர்கோவில் தேரோட்டம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா...கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே, கோடியக்காடு குழகர்கோவில் தேரோட்டம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா...கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தேரோட்டம்

வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்காடு குழகர்கோவிலில்வைகாசி மாத விசாக திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இதனையொட்டி நாள்தோறும் முருகபெருமான் இந்திர விமானம், குதிரை, யானை, ரிஷபம், மயில் வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடந்தது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் இரவு முருகனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களால் சிவகன வாத்தியங்கள் முழங்க தேரில் எழுந்தருளினார். நேற்று காலை சுவாமிக்கும், தேருக்கும் பூஜைகள் நடந்தது.

அரோகரா.... அரோகரா....

பின்னர் மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், வேதாரண்யம் நகராட்சி தலைவர் புகழேந்தி, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் உதயம் முருகையன், சதாசிவம், ஒன்றியக்குழு துணைத்தலைவர் அறிவழகன், ஊராட்சி தலைவர்கள் தமிழ்மணி, சுப்பிரமணியன் மற்றும் சிவகனகசுந்தரம் குடும்பத்தினருடன் ஏராளமான பக்தர்கள் வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா என்ற கோஷத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.முக்கிய வீதிகள் வழியாக வந்த தேர் மீண்டும் நிலையை அடைந்தது. பின்னர் தேரில் இருந்து இறக்கப்பட்ட அம்பாள் சகிதமான பெருமானுக்கு பிராயசித்த அபிஷேகம் நடந்தது.

அன்னதானம்

தேேராட்டத்தையொட்டி பக்தர்களுக்கு நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. வேதாரண்யம் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் தலைமையில் போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் (பொறுப்பு) ராஜா மற்றும் ஊழியர்கள், பக்த பிரமுகர்கள் செய்திருந்தனர்.


Next Story