கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்


கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம்   முன்பு ஆர்ப்பாட்டம்
x

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்க தலைவர் பாலமுருகன் தலைமையில் நிர்வாகிகள் மேலாடை இல்லாமல் கண், காது, வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு வந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பின்னர் அவர்கள் உதவி கலெக்டர் நேர்முக உதவியாளர் இசக்கிராஜிடம் கொடுத்த கோரிக்கை மனுவில்,

கோவில்பட்டியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸூக்கு சிலைஅமைக்க வேண்டும் என பலமுறை மனு வழங்கி உள்ளோம். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கப் படவில்லை. சுதந்திரத்துக்காக பாடுபாட்ட நேதாஜிக்கு கோவில்பட்டியில் சிலை அமைத்து அரசு விழா எடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் அக்.1-ந்தேதி கோவில்பட்டி உதவி அலுவலகத்தில் இருந்து தலைமை செயலகம் வரை சைக்கிளில் சென்று மனு அளிக்க உள்ளோம், என தெரிவித்திருந்தனர்.


Next Story