கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து தண்ணீர் வீணாகும் அவலம்

கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து தண்ணீர் வீணாகும் அவலம்
x

கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து தண்ணீர் வீணாகும் அவலம்

நாகப்பட்டினம்

வாய்மேடு:

நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த வண்டுவாஞ்சேரியிலிருந்து அண்ணா பேட்டை, வாய்மேடு, தகட்டூர், மருதூர், ஆயக்காரன்புலம் வழியாக வேதாரண்யம் செல்லும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உள்ளது. வாய்மேட்டில் முள்ளியாற்றின் மேல் செல்லும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக ஆற்றுக்கு செல்லும் நிலை உள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனுக்கள் அளித்தும், இதுவரை நடவடிக்ைக எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாய்மேட்டில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story