கொல்லிமலையில் பலத்த மழை புத்தக்கல் தரைப்பாலம் நீரில் மூழ்கியது

கொல்லிமலையில் பலத்த மழை  புத்தக்கல் தரைப்பாலம் நீரில் மூழ்கியது
x

கொல்லிமலையில் பலத்த மழை புத்தக்கல் தரைப்பாலம் நீரில் மூழ்கியது

நாமக்கல்

சேந்தமங்கலம்:

கொல்லிமலையில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அங்குள்ள வளப்பூர் நாடு ஊராட்சியில் புத்தக்கல் கிராமம் வழியாக ஓடும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அங்குள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் அப்பகுதியில் உள்ள கொளத்து குழி, பள்ளத்து வளவு, கருமூர் போன்ற பகுதிகளை சேர்ந்த மலைவாழ் மக்கள் பிற பகுதிகளுக்கு செல்ல சிரமத்துடன் ஆற்றை கடந்து சென்று வருகின்றனர். எனவே ஆற்றின் குறுக்கே சிறுபாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story