கொண்டையம்பாளையம் கிராம சபை கூட்டத்தில்பா.ஜ.க. - தி.மு.க.வினர் இடையே வாக்குவாதம்


கொண்டையம்பாளையம் கிராம சபை கூட்டத்தில்பா.ஜ.க. - தி.மு.க.வினர் இடையே வாக்குவாதம்
x

கொண்டையம்பாளையம் கிராம சபை கூட்டத்தில் பா.ஜ.க. - தி.மு.க.வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஈரோடு

டி.என்.பாளையம்

கொண்டையம்பாளையம் கிராம சபை கூட்டத்தில் பா.ஜ.க. - தி.மு.க.வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பணிகள் குறித்த விவரம்

டி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றியம் கொண்டையம்பாளையம் ஊராட்சியின் பல்நோக்கு மைய வளாகத்தில் கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு ஊராட்சி தலைவர் மரகதம் பாலு தலைமை தாங்கினார். கூட்டத்தில் 01.04.2023 முதல் 31.07.2023 வரையிலான பொது நிதி செலவினம் மற்றும் திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் ஊராட்சியின் கடந்த ஆண்டிற்கான தணிக்கை அறிக்கையினை கிராம சபையின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது. ஊராட்சியில் நடைபெற்ற பணிகளின் விவரம் குறித்து கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து ஜல் ஜீவன், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தூய்மை பாரதம் இயக்கம் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட முதியோர்கள் சிலர் தங்களுக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை என தெரிவித்தனர்.

பரபரப்பு

அதனை தொடர்ந்து டி.என்.பாளையம் கிழக்கு ஒன்றிய பா.ஜ.க. தலைவர் ராமகிருஷ்ணன், 100 நாட்கள் வேலை திட்டத்தில் முழு சம்பளமாக 294 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு முழு சம்பளமாக 294 ரூபாய் வழங்கப்படுகிறது. மற்ற நபர்களுக்கு ரூ.220 முதல் ரூ.270 வரை சம்பளம் வழங்கப்படுகிறது என கேள்வி எழுப்பினார்.

இதற்கிடையே இந்த கேள்விக்கு தி.மு.க.-வை சேர்ந்த ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் பா.ஜ.க.வை சேர்ந்தவருக்கும் அவருக்கும் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story