அந்தியூர் கால்நடை சந்தையில் கொங்கு காளை மாடு ஜோடிரூ.1½ லட்சத்துக்கு விற்பனை


அந்தியூர் கால்நடை சந்தையில் கொங்கு காளை மாடு ஜோடிரூ.1½ லட்சத்துக்கு விற்பனை
x

அந்தியூர் கால்நடை சந்தையில் கொங்கு காளை மாடு ஜோடி ரூ.1½ லட்சத்துக்கு விற்பனையானது.

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் கால்நடை சந்தையில் கொங்கு காளை மாடு ஜோடி ரூ.1½ லட்சத்துக்கு விற்பனையானது.

கொங்கு காளை மாடு

அந்தியூரில் கால்நடை சந்தை நடைபெற்றது. இதற்கு பர்கூர், ஈரோடு, மேட்டூர், பண்ணவாடி, கொளத்தூர், தர்மபுரி, மேச்சேரி, எடப்பாடி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கால்நடைகள் கொண்டு வரப்பட்டன.

இதில் கொங்கு காளை மாடு ஜோடி குறைந்தபட்ச விலையாக ரூ.1 லட்சத்துக்கும், அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும், காங்கேயம் காளை மாடு ஜோடி குறைந்தபட்சமாக ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கும், அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்துக்கும், நாட்டு பசு மாடு ஒன்று குறைந்தபட்சமாக ரூ.20 ஆயிரத்துக்கும், அதிகபட்சமாக ரூ.60 ஆயிரத்துக்கும், எருமை மாடு ஒன்று குறைந்தபட்சமாக ரூ.30 ஆயிரத்துக்கும், அதிகபட்சமாக ரூ.70 ஆயிரத்துக்கும் விலை போனது.

சிந்து பசு மாடு

ஜெர்சி பசு மாடு குறைந்தபட்ச விலையாக ரூ.20 ஆயிரத்துக்கும், அதிகபட்சமாக ரூ.40 ஆயிரத்துக்கும், சிந்து பசுமாடு குறைந்தபட்சமாக ரூ.25 ஆயிரத்துக்கும், அதிகபட்சமாக ரூ.45 ஆயிரத்துக்கும், பர்கூர் இன காளை மாடு ஜோடி குறைந்தபட்சமாக ரூ.30 ஆயிரத்துக்கும், அதிகபட்சமாக ரூ.40 ஆயிரத்துக்கும், பர்கூர் இன பசு மாடு ஒன்று குறைந்தபட்சமாக ரூ.15 ஆயிரத்துக்கும், அதிகபட்சமாக ரூ.20 ஆயிரத்துக்கும், கன்றுக்குட்டி ஒன்று குறைந்தபட்சமாக ரூ.5 ஆயிரத்துக்கும், அதிகபட்சமாக ரூ.15 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டன.

ஈரோடு, பெருந்துறை, சத்தியமங்கலம், கோபி, கவுந்தப்பாடி, பவானி மற்றும் கேரளா மாநில பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் கால்நடைகளை விலை பேசி வாங்கி சென்றனர்.


Next Story