அந்தியூர் கால்நடை சந்தையில் கொங்கு காளை மாடு ஜோடி ரூ.1¾ லட்சத்துக்கு விற்பனை


அந்தியூர் கால்நடை சந்தையில் கொங்கு காளை மாடு ஜோடி  ரூ.1¾ லட்சத்துக்கு விற்பனை
x

அந்தியூர் கால்நடை சந்தையில் கொங்கு காளை மாடு ஜோடி ரூ.1¾ லட்சத்துக்கு விற்பனையானது.

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் கால்நடை சந்தையில் கொங்கு காளை மாடு ஜோடி ரூ.1¾ லட்சத்துக்கு விற்பனையானது.

கொங்கு காளை மாடு

அந்தியூரில் நேற்று கால்நடை சந்தை நடைபெற்றது. இதற்கு அந்தியூர், ஈரோடு, மேட்டூர், கொளத்தூர், எடப்பாடி, கொங்கணாபுரம், பண்ணவாடி, தர்மபுரி, பர்கூர், மற்றும் கர்நாடகா மாநில பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொண்டு வரப்பட்டன.

இதில் கொங்கு காளை மாடு ஜோடி குறைந்தபட்ச விலையாக ரூ.80 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்துக்கும், நாட்டு பசுமாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.25 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.60 ஆயிரத்துக்கும், சிந்து பசு மாடு ஒன்று குறைந்தபட்சம் ரூ.15 ஆயிரத்துக்கும், அதிகபட்சமாக ரூ.40 ஆயிரத்துக்கும் விலை போனது.

எருமை மாடு

ஜெர்சி பசுமாடு ஒன்று குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரத்துக்கும், அதிகபட்சமாக ரூ.45 ஆயிரத்துக்கும், எருமை மாடு ஒன்று குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரத்துக்கும், அதிகபட்சமாக ரூ.70 ஆயிரத்துக்கும், பர்கூர் இன காளை மாடுகள் ஜோடி குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரத்துக்கும், அதிகபட்சம் ரூ.50 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.

பர்கூர் இன பசு மாடு ஒன்று குறைந்தபட்சம் ரூ.15 ஆயிரத்துக்கும், அதிகபட்சம் ரூ.25 ஆயிரத்துக்கும், கன்றுக்குட்டி ஒன்று குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரத்துக்கும், அதிகபட்சம் ரூ.10 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டன. ஈரோடு, சத்தியமங்கலம், பெருந்துறை, திருப்பூர், கோவை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் கால்நடைகளை விலை பேசி பிடித்து சென்றனர்.


Next Story