அந்தியூர் கால்நடை சந்தையில் கொங்கு காளை மாடு ஜோடிரூ.2 லட்சத்துக்கு விற்பனை


அந்தியூர் கால்நடை சந்தையில் கொங்கு காளை மாடு ஜோடிரூ.2 லட்சத்துக்கு விற்பனை
x

அந்தியூர் கால்நடை சந்தையில் கொங்கு காளை மாடு ஜோடி ரூ.2 லட்சத்துக்கு விற்பனையானது.

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் கால்நடை சந்தையில் கொங்கு காளை மாடு ஜோடி ரூ.2 லட்சத்துக்கு விற்பனையானது.

காங்கேயம் காளை மாடு

அந்தியூர் கால்நடை சந்தை நேற்று கூடியது. இதற்கு அந்தியூர், அத்தாணி, மேட்டூர், கொளத்தூர், பண்ணவாடி, தர்மபுரி, பர்கூர், ஈரோடு, பவானி, கோபி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் கால்நடைகளை விற்பனைக்காக பிடித்து வந்திருந்தனர்.

இதில் கொங்கு காளை மாடு ஜோடி குறைந்தபட்ச விலையாக ரூ.1 லட்சத்துக்கும், அதிகபட்சம் ரூ.2 லட்சத்துக்கும், காங்கேயம் காளை மாடு ஜோடி குறைந்தபட்சமாக ரூ.80 ஆயிரத்துக்கும், அதிகபட்சம் ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும், நாட்டு பசு மாடு ஒன்று குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரத்துக்கும், அதிகபட்சம் ரூ.70 ஆயிரத்துக்கும் விலை போனது.

எருமை மாடு

எருமைமாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.20 ஆயிரத்துக்கும், அதிகபட்சமாக ரூ.70 ஆயிரத்துக்கும், சிந்து பசுமாடு ஒன்று குறைந்தபட்சமாக ரூ.15 ஆயிரத்துக்கும், அதிகபட்சமாக ரூ.30 ஆயிரத்துக்கும், ஜெர்சி பசுமாடு ஒன்று குறைந்தபட்சமாக ரூ.30 ஆயிரத்துக்கும், அதிகபட்சம் ரூ.45 ஆயிரத்துக்கும், கன்றுக்குட்டி ஒன்று குறைந்தபட்சம் ரூ.5ஆயிரத்துக்கும், அதிகபட்சமாக ரூ.15 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டன.

ஈரோடு, திருப்பூர், சத்தியமங்கலம், கோவை, மேட்டுப்பாளையம், ஊட்டி மற்றும் கேரளா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் கால்நடைகளை விலைபேசி பிடித்து சென்றனர்.


Next Story