செஞ்சி அருகேமாரியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் திருவிழா
செஞ்சி அருகே மாரியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் திருவிழா நடைபெற்றது.
விழுப்புரம்
செஞ்சி,
செஞ்சியை அடுத்த பாடி பள்ளம் கிராமத்தில் உள்ள சிவசக்தி மாரியம்மன் கோவிலில் கூழ் வார்த்தல் திருவிழா நடைபெற்றது. விழா கடந்த 7-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வந்தது.
நேற்று முன் தினம் கூழ் வார்த்தல் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மதியம் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து இரவு அம்மன் வீதி உலா நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story